இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்டம்!

Report Print Kabilan in ஜோதிடம்

இன்று உங்கள் ராசி எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்தும், எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது குறித்தும் இங்கு காண்போம்.

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி வந்தடையும். பணியில் உங்களுக்கான அதிகரிக்கும் நிலையில், நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் இவர்களுக்கு சாதமாக வெற்றியில் முடியும்.

அதிர்ஷ்ட எண்: 5, அதிர்ஷ்ட திசை: கிழக்கு, அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை சம்பாதிப்பீர்கள். பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களினால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 1, அதிர்ஷ்ட திசை: மேற்கு, அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

இவர்களுக்கு புதிய முயற்சிகளால் பெரும் புகழ் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட திசை: கிழக்கு, அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

இவர்களுக்கு அந்நியர்களால் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் சில சுப விரயங்கள் உண்டாகும். தொழிலில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட எண்: 4, அதிர்ஷ்ட திசை: வடக்கு, அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

இவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழிலில் பல மடங்கு லாபம் அதிகரிக்கும். இவர்களின் உயர் அதிகாரிகளிடம் இவர்களைப் பற்றிய நம்பிக்கை மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு இன்று மேன்மையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 2, அதிர்ஷ்ட திசை: கிழக்கு, அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

இவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் இவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை இவர்கள் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்: 5, அதிர்ஷ்ட திசை: தெற்கு, அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

துலாம்

உடன் பிறந்தவர்களால் துலாம் ராசிக்காரர்கள் சுப விரயங்கள் அடைவார்கள். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்வார்கள். அதன்மூலம் சாதகமான முடிவினை எட்டுவார்கள்.

அதிர்ஷ்ட எண்: 6, அதிர்ஷ்ட திசை: மேற்கு, அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

உள்ளூர் வாணிகம் இவர்களுக்கு மந்தமாக இருந்தாலும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு வாணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட திட்டங்களை தீட்டுவார்கள்.

நண்பர்களின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். இவர்கள் கற்ற கலைகளால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1, அதிர்ஷ்ட திசை: வடக்கு, அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

தனுசு

இவர்கள் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை சம்பாதிப்பார்கள். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட திசை: மேற்கு, அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

கல்வி சம்பந்தப்பட்ட பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். வாதத்திறமையால் லாபம் அடைவார்கள். விளையாட்டு பயிற்சியின் போது கவனத்துடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 7, அதிர்ஷ்ட திசை: தெற்கு, அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

கும்பம்

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளினால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட திசை: வடக்கு, அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

தாய்வழி உறவுகளினால் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருப்பது அவசியம். விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மகிழும் வாய்ப்பு உருவாகும்.

அதிர்ஷ்ட எண்: 4, அதிர்ஷ்ட திசை: தெற்கு, அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்