இன்றைக்கு இந்த ராசி மேல் தான் சனிபகவானோட முழு பார்வையும் இருக்குமாம்! எச்சரிக்கை

Report Print Kavitha in ஜோதிடம்

சனிபகவானின் பார்வை இன்று இன்று 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். வியாபாரங்ளில் தேவையில்லாத அலைச்சல்கள் வந்து போகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சுப செய்திகள் வந்து சேரும்.

அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியப் பணியில் பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளங்கள்.

உயர் அதிகாரிகள் உங்களுக்குச் சாதகமான முடிவை தருவார்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறமும் இருக்கும்.

ரிஷபம்

உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும்.

சர்வதேச பயணங்களின் மூலமாக உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்க ஆரம்பிக்கும். விளையாட்டு சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

பயணங்களின் மூலமாக தொழிலில் மாற்றங்கள் உருவாகும். எந்த வேலை கொடுத்தாலும் அதை குறைவான நேரத்தில் வேகமாக செய்து முடித்து நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியமும் தன்னம்பிகையும் அதிகரிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்

புதிய நட்பு வட்டாரம் உருவாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் செல்லும் இடமெல்லாம் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். தொழில் பங்குதாரர்களுடன் இணைந்து செய்கின்ற செயல்கள் எல்லாமே லாபத்தையே தரும்.

மனதுக்குள் நினைத்து வைத்திருந்த காரியங்கள் நிறைவேற தேவையான அனுகூலமான விஷயங்கள் நடக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

சிம்மம்

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய காரயிங்களில் ஈடுபட்டு மனம் அமைதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள்.

தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகளும் மன வருத்தங்களும் உண்டாக வாய்ப்பு உண்டு. கொஞ்சம் கவனமாக இருங்கள்.

உங்களுடைய பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.

கன்னி

ஆன்மீகம், நன்கொடை ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். மனம் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள்.

தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும்.

பழைய நண்பரைச் சந்திப்பீர்கள். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்

இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். எந்த காரியமாக இருநு்தாலும் அதை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செய்யுங்கள். வேலையிடத்தில் உங்களுக்கான புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.

நண்பர்களுடன் கொஞ்சம் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொண்டு, சந்தோஷம் அடைவீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது தேவையில்லாத சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

உங்களுடைய சுயதொழிலை மேம்படுத்துவதற்கான புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். உடல் எடையைக் குறைப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

மனதுக்குள் தேங்கி குழப்பிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்ற ஆட்களுக்கு வெளியிடங்களில் இருந்து உதவிகள் பெருகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். தொழிலில் தேவையில்லாத அலைச்சல்கள் வந்து போகும். ஆனாலும் நல்ல செய்திகள் கொஞ்சம் காலதாமதமாக வந்து சேரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பெரும் லாபம் உண்டாகும்.

உங்களுடைய சொந்த தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்

கணினி தொடர்பான பணிகளில் இருக்கின்றவர்களுக்க பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் செய்யும் இடத்தில் புதுவிதமான அனுபவங்கள் தோன்றும். உறவினர்களைப் பார்ப்பதற்கான சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வீர்கள்.

தொழிலை மேம்படுத்துவதற்கான கடன் வாங்கியாவது நிறைய புதிய முயற்சிகளை செயல்படத் திட்டமிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

தொழில் சம்பந்தமாக சின்ன சின்ன அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் சாதகமான சூழல்களே உருவாகும்.

முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் வர வேண்டிய பணவரவு கொஞசம் நிலுவையிலேயே இருக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகளு உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்களுடைய செல்வாக்கும் மதிப்பும் உயர்நு்து கொண்டே போகும்.

வீட்டில் பெற்றோர்களின் ஆசிர்வாதமும் அறிவுரையும் உங்களுடைய மனதுக்குள் தெளிவை உண்டாக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எங்கு சென்றாலும் வெற்றியே உண்டாகும்.

நிர்வாகத் துறையில் இருக்கின்றவர்கள் சின்ன சின்ன மாறறங்கள் செய்வது நல்லது. தலைமைப் பொறுப்புக்கு செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...