கன்னிக்கு செல்லும் சூரியன்! இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் கஷ்டங்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர் யார்?

Report Print Kavitha in ஜோதிடம்

சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரிய பெயர்ச்சியானது நிகழும்.

இதனடிப்படையில் இந்த மாதம் சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு செல்கிறார்.

கன்னிக்கு செல்லும் சூரியன் அங்கு அக்டோபர் 17, 2020 வரை இருப்பார்.

அந்தவகையில் சூரியனால் ஒவ்வொரு ராசியிலும் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியில் சூரியன் 6 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். ஆறாவது வீட்டு எதிரிகள் மற்றும் இடையூறுகளைக் குறிப்பதால், இந்த பெயர்ச்சி உங்கள் கடன்கள், நோய்கள், எதிரிகள் மற்றும் பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்லீர்கள். உங்களிடம் உள்ள சிறந்ததை வெளிப்படுத்த முடியும். மேலும் நீங்கள் மேற்கொள்ளும் பணியில் வெற்றியைப் பெற முடியும்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி, முடிவுகளுக்காக காத்திருந்தால் சாதகமான செய்திகள் கிடைக்கும். இருப்டிபனும், வியாபாரம் செய்வராயின், உங்கள் வணிகத்தை விரிவாக்க விரும்பினால், அதற்கு இது நேரமல்ல.

ரிஷபம்

ரிஷப ராசியில் சூரியன் 5 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். இந்த வீடு காதல் வாழ்க்கை மற்றும் கல்வியைக் குறிக்கிறது.

நீங்கள் சில காரணங்களால் உங்கள் படிப்பை விட்டு வெளியேற நேர்ந்தால், இந்த பெயர்ச்சி உங்கள் படிப்பை மீண்டும் தொடர வாய்ப்பை வழங்கும். மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான நேரமாக இருக்கும்.

இருப்பினும், காதல் வாழ்க்கில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். உங்கள் துணையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.

திருமணமானவர்கள் எரிச்சலுணர்வைத் தவிர்த்து, எப்போதும் கூலாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகள் இந்த பெயர்ச்சியால் அதிகம் எரிச்சல் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசியில் சூரியன் 4 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். இது உங்கள் குடும்பத்தை ஓரளவிற்கு பாதிக்கும்.

உங்கள் தந்தையை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். அவரை சந்தோஷமாகவும், அவருக்கு எவ்விதமான மன அழுத்தத்தைக் கொடுப்பதையும் தவிர்த்திடுங்கள்.

இருப்பினும், இந்த பெயர்ச்சி உங்கள் உடன்பிறப்புகளுக்கு சிறப்பான நேரமாக இருக்கலாம்.

உங்கள் உடன்பிறப்புகள் வேலை செய்பவராக இருந்தால், அவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்கலாம். இந்த பெயர்ச்சியால், பணிபுரிபவர்களுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் மற்றும் அவர்களால் சிறந்ததை வழங்க முடியாமல் போகலாம்.

இதன் காரணமாக, உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மகிழ்ச்சியடையாமல் போகலாம். நீங்கள் சொத்து அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய நினைத்தால், இது அதற்கான நேரமல்ல.

கடகம்

கடக ராசியில் சூரியன் மூன்றாவது வீட்டில் இடம் பெயர்கிறார். மூன்றாவது வீடு தைரியம் மற்றும் வலிமையைக் குறிக்கக்கூடியது.

இந்த பெயர்ச்சியால், நீங்கள் போதுமான ஆதரவைக் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெறுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை நிறைவேற்ற முடியும்.

இருப்பினும், உங்கள் உடன்பிறப்புகளுடன் சில வாதங்கள் மற்றும் தகராறுகள் ஏற்படலாம்.

இந்த பெயர்ச்சியால் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் வார்த்தைகளால் சமூகத்தில் மக்களை ஈர்ப்பீர்கள்.

வணிகம் செய்பவர்கள் தங்கள் வணிகத்தில் புதிய வெற்றிகளைக் காண்பார்கள். ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளில் ஈடுபடக்கூடாது.

சிம்மம்

சிம்ம ராசியில் சூரியன் இரண்டாவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். இதன் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். மேலும் இது உங்களுக்கு சிறந்த நேரமாகவும் இருக்கும்.

உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக உங்கள் பணத்தில் கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியும்.

நீங்கள் எதிர்பார்ப்புக்களின் படி விஷயங்கள் நடக்காவிட்டால், நீங்கள் முரட்டுத்தனமாக மாறலாம். மொத்தத்தில் இந்த பெயர்ச்சி உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.

உங்களைச் சுற்றி உள்ளவர்களிடமும், உங்கள் நலம் விரும்பிகளிடமும் அகங்காரமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசியில் சூரியன் முதல் வீட்டில் இடம் பெயரவிருக்கிறது. இந்த பெயர்ச்சியால், நீங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வீர்கள். இந்த காலத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

சிறிய விஷங்களுக்காக கூட எளிதில் எரிச்சலடைவீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் கவனத்தை செலுத்தினால், உங்களால் சிறந்ததை வழங்க முடியும். உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க யோகா மற்றும் பிற பயிற்சிகளை செய்யுங்கள்.

உங்கள் மனம் அமைதியாக இருப்பதற்கு, தியானம் செய்யலாம் மற்றும் புத்தகங்களைப் படிக்கலாம். மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெல்லத்தை தானம் செய்தால் நேர்மறையான முடிவுகளைப் பெறலாம்.

துலாம்

துலாம் ராசியில் சூரியன் 12 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறது. நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தால், இது உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில், உங்கள் மூத்த உடன்பிறப்புகள் பல வழிகளில் உங்களை ஆதரிக்கக்கூடும்.

இது உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு, இந்த பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இருப்பினும், இந்த ராசிக்காரர்கள், அவர்களின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் சூரியன் 11 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறது. இந்த வீடூ மூத்த உடன்பிறப்புகள், ஆசைகள் மற்றும் நன்மைகளைக் குறிக்கிறது.

இந்த பெயர்ச்சியால் பல வழிகளில் நேர்மறையான முடிவுகளைக் கொண்டு வரும். இந்த காலத்தில் சம்பள உயர்வைப் பெறலாம்.

உங்கள் இலக்குகளை அடைவதற்கும், ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் புதிய மற்றும் சிறந்த வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் வியாபாரத்தை தொடங்குவதற்கு சிறந்த காலம் இது.

இருப்பினும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராயில் சூரியன் 10 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். இதனால் இந்த காலம் பூர்வீக மக்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். உங்கள் வேலையில் நீங்கள் முழு திறமையுடன் செயல்படுவீர்கள்.

இது நிச்சயம் உங்கள் உயர் அதிகாரிகளை கவர்ந்திழுக்கும். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதோடு, சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். நீங்கள் ஒரு பொசசிவ் காதலராக இருந்தால், அதிகப்படியான உடைமை மற்றும் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இல்லையெனில் அது உங்கள் உறவை முறித்துவிடும். முக்கியமாக தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மகரம்

மகர ராசியில் சூரியன் 9 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். ஒன்பதாவது வீடு தன்மை, மதம், பயணம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கான காலம் இதுவல்ல. உங்கள் வியாபாரத்தை விரிவாக்க நினைத்தால், அனுபவமுள்ள மற்றும் அறிவுள்ளவர்களை அணுகுங்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வயது மூத்தோரிடம் சில தேவையற்ற வாதங்களை மேற்கொள்ள நேரிடலாம். இதுப்போன்ற வாதங்களைத் தவிர்க்குமாறு இந்த ராசிக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்ப ராசியில் சூரியன் 8 ஆவது வீட்டில் இடம் பெயர்கிறார். இந்த வீடு ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டங்களையும், சவால்களையும் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் உங்களை கவலையடையச் செய்யலாம்.

உங்கள் அமைதியை இழந்து கவலைப்படுவதற்கு பதிலாக, நீங்கள் அமைதியாக இருங்கள் மற்றும் உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது நல்லது.

உங்கள் தந்தையுடன் ஏற்படக்கூடிய வாக்குவாதம் இருவருக்குமிடையில் சிறிது தூரத்தை உருவாக்கக்கூடும்.

நீங்கள் கூட்டு வணிகத்தில் இருந்தால், உங்கள் கூட்டாளருடன் சில தேவையற்ற தகராறு ஏற்படலாம். இந்த வாக்குவாதம் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தக்வடும். எனவே உங்கள் பிரச்சனைகளை அமைதியான முறையில் கையாள்வது நல்லது.

மீனம்

மீன ராசியில் சூரியன் ஏழாவது வீட்டில் இடம் பெயர்கிறார். இந்த வீடு ஒருவரின் திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கும்.

இந்த பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் மனநிலையை இழக்க நேரிட்டு, உங்கள் துணையை ஏமாற்றகூடும். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுங்கள்.

உறவில் ஒளிவுமறைவின்றி இருக்க முயலுங்கள். இந்த பெயர்ச்சியால் நீங்கள் குறுகிய மனநிலையுடன் இருப்பதால், மக்கள் உங்களிடம் இருந்து விலகி இருப்பார்கள். எனவே நீங்கள் ஜாலியாக மற்றும் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்