மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வளர்ப்பு தந்தை: அதிர வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
270Shares
270Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் 13 வயது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட தந்தை சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

குறித்த நபர் ஏற்கெனவே தமது மகள் தூக்கத்தில் இருக்கும்போது அவரை ஆபாசமாக தொட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், தற்போது ஆபாசப்புகைப்பட வழக்கில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பிரிஸ்பேன் நகரில் குடியிருக்கும் குறித்த நபரின் வளர்ப்பு மகளாவார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 13 வயது இருக்கும்போது அவரது புகைப்படத்தை ஆபாச நடிகையின் புகைப்படத்துடன் இணைத்து இவர் வெளியிட்டுள்ளார்.

மட்டுமின்றி மிருகங்களுடன் உறவு வைத்துக் கொள்வது போலவும் குறித்த சிறுமியின் புகைப்படத்தை சித்தரித்துள்ளார்.

தற்போது 51 வயதாகும் குறித்த நபர் கடந்த 2015 செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரிஸ்பேன் வந்திறங்கியபோது அவரது உடமைகளை விமான நிலையத்தில் வைத்து சோதனையிட்ட அதிகாரிகள், அதில் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாசப்புகைப்படங்களை மீட்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தம்மிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் கலைப்படைப்பு எனவும் அதில் துளியளவும் வக்கிரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது வாதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றம் ஆபாசப்புகைப்படங்கள் மற்றும் சிறுவர் பாலியல் புகைப்படங்கள் சேகரித்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்