செல்லப்பிராணியை பாம்பிடமிருந்து காப்பாற்ற முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
312Shares
312Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் வீட்டு செல்லப்பிராணியை கொடிய விஷம் கொண்ட பாம்பிடமிருந்து இளைஞர் காப்பாற்ற முயன்ற நிலையில் பாம்பு கடித்து அவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, 24 வயதான இளைஞர் வீட்டுக்குள் அதிக விஷத்தன்மை கொண்ட பழுப்பு நிற பாம்பு நுழைந்துள்ளது.

வீட்டிலிருந்த செல்லப்பிராணியை பாம்பு கடிக்க சென்ற நிலையில் அதை தடுக்க இளைஞர் முயன்றுள்ளார்.

இதையடுத்து பாம்பானது இளைஞரை கடித்ததில் அவர் மயங்கி விழுந்தார், பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்ட நிலையில் ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவுஸ்திரேலியாவில் பாம்பு கடித்து உயிரிழப்பவர்களில் 60 சதவீதம் பேர் இந்த வகையான பழுப்பு நிற பாம்பு கடித்து தான் உயிரிழக்கிறார்கள்.

நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக இரண்டிலிருந்து மூன்று பேர் வரை பாம்பு கடியால் உயிரிழக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்