அவள் சொர்க்கத்தில் ஓய்வெடுக்கிறாள்: கண்ணீரில் கரைந்த அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட மாணவி

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 21 வயதான இஸ்ரேல் மாணவிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இஸ்ரேலைச் சேர்ந்த 21 வயது மாணவியான அயா மாசர்வே மெல்போர்னில் உள்ள 'தி லா ட்ரோப்' பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று தன் சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டு சென்றபோது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

புதிய குரல்களை போன் மூலம் கேட்ட அயாவின் சகோதரி ஏதோ விபரீதம் என்பதை அறிந்து போலீசாருக்கு தகவல்கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அயா படிக்கும் பல்கலைக்கழகத்தின் அருகில் அவரது உடலை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கான முறையில் 20 வயது நபரை பொலிசாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து அயா தந்தை மற்றும் சகோதரி வந்து உடலை இஸ்ரேல் நாட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் மாணவிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து கண்ணீர் அஞ்சலியில் செலுத்தினர். எனது மகளை நினைத்து பல்வேறு கனவுகள் கொண்டிருந்தேன், ஆனால் அவை தற்போது நிறைவேறாது என்று எனக்கு தெரியும்,

அவள் சொர்க்கத்தில் ஓய்வெடுக்கிறாள் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers