மூன்று பேரை கொத்திவிட்டு தப்பிய பாம்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

12 மணி நேரத்துக்குள்ளாக அவுஸ்திரேலிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பாம்பு ஒன்றினால் கொத்தப்பட்டுள்ளனர்.

Queensland நகரமான Townsvilleஇல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொத்தப்பட்ட மூவரில் ஒருவர் 30 வயதுள்ள ஒரு ஆண், ஒரு பெண் Mount Louisaவைச் சேர்ந்தவர், மற்றொருவர் 20 வயதுள்ள ஒரு ஆண்.

கொத்தப்பட்டவர்களில் இருவர் Townsville மருத்துவமனைக்கும், ஒருவர் Ingham மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை கடித்தது என்ன வகை பாம்பு என்பது தெரியவில்லை.

கோடை நெருங்கி வருவதையடுத்து பாம்புகள் இனி உலாவத்தொடங்கும். அதுவும் இந்த மூவரையும் கடித்த பாம்பு இன்னமும் வெளியில் எங்கேயோதான் சுற்றிக்கொண்டுள்ளது.

எனவே மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என மருத்துவ துறையினர் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்