திருமணத்தில் கலந்து கொண்ட 31 உறவினர்களை தாக்கிய கொரோனா! தேனிலவில் வேதனையடைந்த புதுமணத்தம்பதி

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியின் திருமணத்துக்கு வந்த உறவினர்கள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெற்கு சிட்னியில் உள்ள Tumbling Waters Retreat-ல் கடந்த 6ஆம் திகதி Scott Maggs என்பவருக்கும் Emma Metcalf என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் தம்பதி மாலத்தீவுக்கு தேனிலவு சென்றனர். அப்போது அவர்களுக்கு போன் செய்த குடும்பத்தார் திருமணத்துக்கு வந்த சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக கூற இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் Scott மற்றும் Emma ஆகிய இருவரும் சொந்த நாட்டுக்கு திரும்பிய நிலையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

அதன் முடிவுக்காக இருவரும் காத்திருக்கும் சூழலில் தம்பதியின் திருமணத்துக்கு வந்தவர்களில் 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிலர் பரிசோதனை முடிவுக்காக காத்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நிறைமாத கர்ப்பிணி, எம்.பியும் அடக்கமாகும்.

Emma மற்றும் Scott திருமணத்துக்கு வந்த சில அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளது தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் மூலமே மற்றவர்களுக்கு பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து புதுமணத்தம்பதி கூறுகையில், எங்கள் திருமணத்துக்காக கூடிய பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையும் தருகிறது.

எங்கள் உறவினர்களும், நண்பர்களும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என கூறியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இதுவரை 876 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது தொடர்பிலும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்