கொழுக்கொழு கன்னங்களுக்கு இதை செய்தாலே போதும்

Report Print Printha in அழகு
330Shares

உடல் குண்டாக இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முக அழகின் தோற்றத்தையே கெடுத்து விடும்.

அந்த ஒட்டிய கன்னங்களை கொழுகொழுவென்று மாற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

அதோடு முகத்திற்கு சில மசாஜ் முறைகளை பின்பற்றினால் நல்ல பலனை பெறலாம்.

கொழுகொழு கன்னங்களை பெற என்ன செய்ய வேண்டும்?
  • புரதம், மாவுச்சத்து, கொழுப்புசத்து ஆகியவை நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து அதை முகத்திற்கு தடவி வந்தால் கன்னம் குண்டாகும்.
  • மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி வைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும்.
  • ஆப்பிள், கேரட் ஆகியவற்றுடன் 1/2 கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாக பளபளப்பாகும்.
  • ஆலிவ் ஆயில் அல்லது கற்றாழையை கன்னத்தில் தினமும் தேய்த்து வர கன்னத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
  • 1 கப் பாலில் 1 தேக்கரண்டி தேன், சிறிதளவு சீஸ் மற்றும் 1 மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.
  • தினமும் ஆரஞ்சு பழத்தின் ஜூஸை தவறாமல் குடித்து வர கொழுக்கொழு கன்னம் கிடைக்கும்.
  • 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் பப்பாளி ஆகிய இரண்டையும் சேர்த்து பேஸ்டாக்கி அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • பால், முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பருப்பு, கீரைகள், ஆகியவற்றை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்