சதை தளர்ந்து தொங்குகிறதா? டிப்ஸ் இதோ

Report Print Printha in அழகு

உடல் எடையை குறைவதால் சருமத்தின் சுருங்கி விரியும் தன்மை மற்றும் கொலாஜென் உற்பத்தி குறைகிறது.

இதன் காரணத்தால் சதை தொங்கி, சருமம் முதிர்ச்சியுடன் காணப்படுகிறது. இதற்கான சில தீர்வுகள் இதோ,

சருமத்தின் தளர்ச்சியை தடுக்க என்ன செய்வது?
  • விட்டமின் E மாத்திரைகளில் உள்ள எண்ணெய்யை எடுத்து அதனை சூழல் வடிவில் சருமத்தில் தடவி இரவு முழுதும் விட்டு காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • முட்டையின் வெள்ளை கருவை எடுத்து சதைகள் தொங்கும் இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • ஜோஜோபா எண்ணெய்யுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து அதை சதைகள் தொங்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
  • இலவங்க பட்டை தூள் ½ ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து அதை தளர்ந்துள்ள சருமத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • ஆலிவ் ஆயிலை 30 வினாடிகள் சூடு செய்து அதை தளர்ந்த சதையில் மென்மையாக மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • ஷியா பட்டரை சிறிதளவு எடுத்து உருக்கி அதை சரும பாதிப்பு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • 1 ஸ்பூன் முல்தானி மீட்டி பவுடருடன் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதை சரும பாதிப்பு உள்ள இடத்தில் தடவி 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • கற்றாழை ஜெல்லில் 3 ஸ்பூன் எடுத்து அதை சதை தளர்ந்து தொங்கும் இடத்தில் தடவி இரவு முழுதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்