கை, கால்கள் கறுப்பாக காணப்படுகின்றதா? இதோ சூப்பர் ஜடியா!

Report Print Kavitha in அழகு

பெண்கள் முக அழகிற்கு அடுத்து அதிகம் நேரம் செலவு அதிகக் கவனம் செலுத்துவது கைகளும் கால்களும் தான்.

உடலில் இளமை விலகி, முதுமை நெருங்குவதை கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம்.

சில பெண்களுக்கு முகம் பொழிவுடன் காட்சியளிக்கும் ஆனால் கைகள், கால்கள் ,மூட்டுகள் கருமையடைந்து காணப்படுவதால் பியூட்டி பாலர்கள் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் செய்து தற்காலிகமாக கருமையை போக்குவதுண்டு.

இனி பெடிக்யூர் மெனிக்யூர் என்ற வார்த்தைக்கு இடமேயில்லை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கை கால்களிலுள்ள கருமையை எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம்.

கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் நன்கு அழகாக பொலிவோடு மின்னுவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், நகங்கள் வழுவடைந்து காணப்படும்.

சப்பாத்தி மாவு பிசைந்த பின்னர் கைகளை கழுவாமல், அப்போது கைகளில் சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், கைகளில் உள்ள அழுக்குகள் போவதோடு, கைகள் சுத்தமாகவும் மென்மையாகவும் காணப்படும்.

இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் கருமை நீங்கும்.

வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் வாஸ்லின் சேர்த்து கலந்து, பாதங்களை அதில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, குதிகாலை சுத்தம் செய்யது சிறிய கருங்கற்கள் அல்லது பிரஷ் வைத்து ஸ்கரப் செய்து வர வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

கைகள் வறட்சியுடன் காணப்படால் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கைகளை அதில் சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கைகள் மென்மையாக காணப்படும்.

ஓட்ஸ், தேன், பால் மற்றும் தண்ணீரை கலந்து, கை மற்றும் கால்களில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் கை மற்றும் கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் பறந்து போய்விடும்.

தோல் ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கை, கால்களின் நிறத்தை அதிகரிக்கலாம்.

இரவில் நீரில் ஊற வைத்த பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, கை, கால்களில் இருக்கும் கருமை நீங்கி, வெள்ளையாகும்.

மைசூர் பருப்பை பொடி செய்து, அத்துடன் தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்