10 நிமிடத்தில் கருமையை போக்கும் உருளைக்கிழங்கு

Report Print Kavitha in அழகு

கோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்டு, இதற்கு ஒரு அற்புத பொருள் தான் உருளைக்கிழங்கு, இது இயற்கையாகவே ப்ளிச் தன்மை கொண்டது.

உருளைக்கிழங்கை வைத்து முகத்தின் அழகை எவ்வாறு மெருகூட்டுவது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • அரிசி மா
  • எலுமிச்சை
  • உருளைக்கிழங்கு

முதலில் உருளைக்கிழங்கு நறுக்கிய துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பின் அதை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் அரிசி மா மற்றும் எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு என்பவற்றை நன்கு கலந்து அதை முகத்தில் தடவுங்கள், பின் 10 நிமிங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் முகத்தில் உள்ள கருமை நீங்க பெற்று முகம் இயற்கையாக பிரகாசம் அடையும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்