உங்களுக்கும் இப்படி இருக்கா? ஈஸியா சரிபண்ணலாம்

Report Print Fathima Fathima in அழகு
483Shares
483Shares
ibctamil.com

ஆண், பெண் என இரு பாலருக்குமே பாத வெடிப்பு பிரச்சனை இருக்கும், குறிப்பாக வீட்டு வேலை செய்வதால் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.

வெடிப்பில் தூசிகள் படியும் போது வலி ஏற்படும், இதனால் சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்படலாம், இதனை பித்த வெடிப்பு என்றும் கூறுவார்கள்.

இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பெரிதும் துன்பத்துக்கு ஆளாக நேரிடும்.

இதற்கான இயற்கை தீர்வுகள்,

குப்பைமேனி தைலம்

குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

இதனை இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும், பாதமும் அழகுபெறும்.

பட்டை

பட்டைகள் பச்சையாக இருக்கும்போது இடித்து பசையாக்கி பாதவெடிப்பு உள்ள இடத்தில் கட்டிவைத்தால் வெடிப்பு சரியாகும்.

மஞ்சள்

மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பாதவெடிப்பு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து காலையில் கழுவிவர பாதவெடிப்பு சரியாகும்.

பப்பாளி

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்பு குணமாகும்.

மருதாணி

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் குணமாகும்.

எலுமிச்சை

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

வேப்பிலை

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்