உங்க கையில் இப்படி தோல் உறிகின்றதா? அதனை எப்படி போக்குவது? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக நாம் அனைவருக்குமே உள்ளங்கைகளில் தோல் உரிவது ஒரு சாதாரண பிரச்சினை தான்.

இதனால் சிலருக்கு உள்ளங்கைகளில் தோல் உரிவு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

இது வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால் தான் கைகளில் தோல் உரிகிறது.

அதுமட்டுமன்றி பாக்டீரியா தொற்று, நோய் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களாலும் தோல் உரியலாம்

அந்தவகையில் இதனை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

  • வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதெனில் வெதுவெதுப்பான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும்.
  • வெதுவெதுப்பான நீரில் 10-15 நிமிடங்கள் கைகளை ஊற வைத்து பிறகு விட்டமின் E எண்ணெய்யை கைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கைகளும் பளபளக்கும்.
  • ஓட்ஸ் நன்றாக மென்மையாக ஊறியதும் கைகளை அதில் முக்கி 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சுத்தமான நீரில் கழுவி விட்டு நன்றாக துடைத்து விடுங்கள். கொஞ்சம் கைகளில் மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • வெள்ளரிக்காயை எடுத்து அதை துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இப்பொழுது வெள்ளரிக்காயை உங்கள் கைகளில் தடவி நன்றாக தேய்த்து அப்படியே 10 - 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். விட்டமின் ஈ ஆயிலை கொண்டு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
  • தினமும் படுப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை கைகளில் தடவிக் கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். பிறகு கொஞ்சம் மாய்ஸ்சரைசர் தேய்த்து கொள்ளுங்கள்.
  • தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்