உங்கள் தலையில் பேன் தொல்லையா ? இதோ சில எளிய தீர்வுகள்!

Report Print Kavitha in அழகு
399Shares

பேன் மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்குவதாலும் எளிதில் பரவக் கூடியது.

இது இரத்தத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி அரிப்பால் தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும்.

பேன்கள் அதிக அளவு உற்பத்தியாகும் தன்மை கொண்டதால் இதனை எளிய முறையில் அகற்றுவது தான் சிறந்தது.

அந்தவகையில் பேன் தொல்லையில் இருந்து விடுபட சில வீட்டுக்குறிப்புகளை பயன்படுத்தி இதனை எவ்வாறு அகற்றலாம் என இங்கு பார்ப்போம்.

google
  • துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை வேர்களில் படும்படி தேய்த்து, காய்ந்ததும் தலைக்குக் குளித்துவிடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
  • கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கி விடுங்கள். மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலுமாக ஒழிந்துவிடும்.
  • உப்பு மற்றும் வினிகரை சம அளவில் தேவைக்கு ஏற்ப கலந்து அதை ஸ்பிரே பாட்டலில் நிரப்பி வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து தலை குளித்தால் பேன் தொல்லை இருக்காது.
  • பூண்டு நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து தலையில் சீராக அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்தால் பேன்கள் அகலும். வாரம் ஒரு முறை செய்யலாம்.
  • வாஸ்லினை வேர்களில் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை தேங்காய் எண்ணெய் தடவி பேன் சீப் கொண்டு வாரினால் அனைத்து பேன்களும் வந்துவிடும். பின் தலைக்கு குளித்து விடுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்