​முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைக்க வேண்டுமா? அப்போ மாம்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

வயது ஏற ஏற முகத்தில் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். இந்த சுருக்கமானது நமது அழகை மட்டும் இன்றி இளமையையும் கெடுத்துவிடுகின்றது.

இளம் வயதிலேயே வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படுவதற்கு இந்த சுருக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனை தடுக்க எத்தனையோ கிறீம்கள் இருந்தாலும் இவை எல்லாம் தற்காலிகம் தான். இதனை இயற்கை முறையில் கூட சரி செய்ய முடியும்.

முக்கனிகளில் முதன்மையான மாம்பழம் முகச்சுருக்கத்தை தடுக்க உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது மாம்பழத்தை கொண்டு எப்படி முகச்சுருக்கத்தை தடுக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை

  • மாம்பழம் - 3 துண்டுகள்
  • முட்டை - 1

செய்முறை

மாம்பழத்தை மசித்து சிறு கட்டியில்லாமல் வைத்துகொள்ளுங்கள். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்து மசித்த மாம்பழத்தை சேர்த்து நன்றாக இரண்டும் சேரும் அளவுக்கு ஃபேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும்.

இதை முகத்தில் தடவி விடவும். இவை நன்றாக காய்ந்ததும் முகத்தை இறுக்கி பிடிக்கும் போது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

மாம்பழம் முகத்துக்கு ஈரப்பதம் தந்து வறட்சியிலிருந்து காக்கிறது. அதே போன்று முட்டையின் வெள்ளைக்கரு முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்கி மேற்கொண்டு சுருக்கம் வராமல் தடுக்க உதவுகிறது. சருமத்தை உறூதியாக்குகிறது. வயதான தோற்றம் வராமல் காக்கிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்