10 ஆண்டுகளுக்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை: வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in கனடா
257Shares
257Shares
ibctamil.com

கனடாவில் முன்னாள் நடிகையை பொலிஸ் அதிகாரி ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் பலாத்காரம் செய்த நிலையில் அதை நீதிமன்றத்தில் நடிகை சமீபத்தில் கூறியுள்ளார்.

டொரண்டோவை சேர்ந்த பெண்ணொருவர் முன்னாள் நடிகையாக இருந்தவர் ஆவார்.

அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு விண்சென்சோ பொனாசா என்ற பொலிஸ் அதிகாரியால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஆனால் அதிகாரியின் மிரட்டல் காரணமாக அதை வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2015-ல் பாதிக்கப்பட்ட பெண்ணே பொலிஸ் பணியில் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட விண்சென்சோவை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தான் பலாத்காரம் செய்யப்பட்ட முழு சூழலை பெண் நீதிமன்றத்தில் நேற்று விளக்கினார்.

அவர் கூறுகையில், என் முன்னாள் காதலனுடன் எனக்கு சண்டை ஏற்பட்ட போது உதவிக்கு பொலிஸ் அதிகாரி விண்சென்சோவை அழைத்தேன்.

அவர் எனக்கு உதவிய பின்னர் என்னுடன் நட்பானார். இதனிடையில் 2008-ஆம் ஆண்டு என் வீட்டுக்கு வந்த விண்சென்சோ என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார்.

நான் அவரை தடுக்க முயன்ற நிலையிலும் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்.

இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் மிரட்டியதால் நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன்.

பின்னர் நானே பொலிஸ் ஆனதால் இதை வெளியுலகுக்கு தைரியமாக தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் தான் குற்றவாளி இல்லை என விண்சென்சோ நீதிமன்றத்தில் கெஞ்சியபடி கூறினார்.

அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்