கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர் கைது

Report Print Vethu Vethu in கனடா
843Shares
843Shares
lankasrimarket.com

கனடா, டொரொன்டோ பகுதியில் 80 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

12 வயதுடைய சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேறகொண்ட 80 வயதுடைய தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் குறித்த நபர் தனது வீட்டில் சிறுமிக்கு பாடம் கற்பிக்கும் போதும் இவ்வாறு பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவலிங்கம் வல்லிபுரம் என்ற 80 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தாக்குதல், பாலியல் தலையீடு மற்றும் பாலியல் சேட்டை ஆகிய குற்றம் சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

எனினும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்