கனடாவில் நான்கு பேரை சுட்டுக் கொன்ற இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

Report Print Balamanuvelan in கனடா
222Shares
222Shares
lankasrimarket.com

கனடா கிராமமாகிய La Locheஇல் நான்கு பேரைக் கொன்று ஏழு பேரைக் காயப்படுத்திய கனடா நாட்டு இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு அவனுக்கு ஜாமீன் வழங்கப்படாது என்று கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவன் மீது இரண்டு முதல் நிலை கொலைக்குற்றங்கள், இரண்டு இரண்டாம் நிலைக்குற்றங்கள் மற்றும் ஏழு கொலை முயற்சிக் குற்றங்கள் ஆகியவை மத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நிகழ்த்தும் சமயத்தில் அவன் 17 வயது உடையவனாக இருந்தான். அவனது பெயரை பத்திரிகைகளிலோ செய்திகளிலோ வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவனை இந்த வழக்கில் ஒரு சிறுவனாக கருத முடியாது என்று கூறிய நீதிபதி ஒருவர், அவன் வயது வந்த ஒரு மனிதனாகவே கருதப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி அவன் La Locheயிலுள்ள Dayne Fontaine(17) மற்றும் Drayden(13) ஆகிய இரண்டு சகோதரர்களை அவர்களது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றான்.

பின்னர் La Locheயிலுள்ள பள்ளிக்கு சென்ற அவன் அங்கு ஆசிரியராக பணிபுரிந்த Adam Wood(35)மற்றும் அவரது உதவியாளரான 21 வயது Marie Janvier ஆகியோரை சுட்டுக் கொன்றான்.

அவன் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டபின் அவன் தனது குடும்பத்தாரிடமும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடமும் La Loche கிராமத்திலுள்ள அனைவரிடமும் மன்னிப்புக் கோர விரும்புவதாகத் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்