டிரம்பின் கோரிக்கையையே நிராகரித்த கனடா: புடினையும் மதிக்கவில்லை

Report Print Balamanuvelan in கனடா
198Shares
198Shares
ibctamil.com

ரஷ்யாவை மீண்டும் G7 கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்னும் அமெரிக்க அதிபரின் கோரிக்கையையே கனடா நிராகரித்துவிட்டது.

G7 மாநாட்டுக்குப்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்பு G7 அமைப்பு G8 என்றுதான் இருந்தது.

கிரிமியாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டதையடுத்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது.

அரசியல் ரீதியாக வேண்டுமென்றால் ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக் கொள்வது தவறாக இருக்கலாம், ஆனால் நமக்கு உலகத்தை நடத்த வேண்டியுள்ளது. அதனால் ரஷ்யாவை நாம் மீண்டும் G7 கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆனால் கனடா அமெரிக்க அதிபரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் Chrystia Freeland, ரஷ்யா குறித்த கனடாவின் நிலையில் மாற்றமில்லை என்று கூறினார்.

ரஷ்யா இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டது. அது ஒரு புத்திசாலித்தனமான செயல், அது நல்லெண்ணத்துடனும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ரஷ்யா மேற்கத்திய குடியரசுகளின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு நடப்பதில் ஆர்வமில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரான Stephen Harperம் புடின் அதிபராக இருக்கும்வரை ரஷ்யாவை G7 கூட்டமைப்பில் நிச்சயம் சேர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இந்த மேஜையில் புடின் மீண்டும் அமர்வதை கனடா மிக மிக கடுமையாக எதிர்க்கும்.

ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு ஒத்த கருத்து தேவை, அது நடக்க போவதில்லை என்று அவர் 2015 ஆம் ஆண்டே கூறியிருந்தார்.

இதற்கிடையில் ரஷ்யாவை மீண்டும் G7 கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதால் நன்மையை விட தீமைதான் அதிகம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்