கனடாவில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 19 பேர் மரணம்

Report Print Raju Raju in கனடா
212Shares
212Shares
lankasrimarket.com

கனடாவில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த வாரம் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி நாட்டின் Quebec மாகாணத்தில் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

இதில் மொண்றியல் நகரில் மட்டும் 12 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல கடந்த 48 மணி நேரத்தில் ஐந்து பேர் இறந்துள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையில் வெப்பத்தால் இறந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய மற்றும் கிழக்கு கனடாவில் வெப்பநிலை தொடரும் என எதிர்பார்ப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்