கனடாவின் லண்டன் நகரில் அம்பு தாக்கி உயிரிழந்த நபர்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நபர் ஒருவர் அம்பு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரின் வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் நபர் ஒருவர் நேற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து உள்ளூர் நேரப்படி இரவு 12.50 மணிக்கு சம்பவ இடத்துக்கு அவசர உதவி குழுவினர் விரைந்தனர்.

அங்கு நபர் ஒருவர் உடலில் அம்பு பாய்ந்த நிலையில் படுகாயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் ஏற்பட்ட சூழல் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers