வங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் ஹாலிஃபாக்சில் வங்கிக் கொள்ளையன் ஒருவன், தான் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி ஒன்றில் கொள்ளையடித்த அந்த நபர், ஒரு மணி நேரத்திற்குப்பின் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று சரணடைந்தார்.

ஹாலிஃபாக்ஸ் ஷாப்பிங் செண்டரில் உள்ள வங்கி ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தன்னிடம் கத்தி ஒன்று உள்ளதாகக் கூறி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்.

பொலிசார் வங்கியில் விசாரித்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதாவது கொள்ளையடித்து ஒரு மணி நேரம் ஆன நிலையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

அவர் கொள்ளையடித்த பணத்தையும் திரும்பக் கொடுத்து விட்டதாக பொலிசார் தெரிவித்தாலும், அவர் எவ்வளவு கொள்ளையடித்தார் என்பது சரியாக இதுவரை சரியாக தெரியவில்லை.

அவரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்