கனடாவில் வெளிநாட்டு மாணவர் கடத்தப்பட்ட விவகாரம்: குற்றவாளி புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் சீனத்து மாணவர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் டொராண்டோ பகுதியில் குடியிருக்கும் 37 வயது அப்துல்லாஹி அதான் எனவும்,

அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளதாகவும், கனடா முழுவதும் தேடப்படும் குற்றவாளி எனவும் அறிவித்துள்ளனர்.

கடைசியாக அந்த நபர் இருண்ட நீல வண்ண ஜீன்ஸ் மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 23 ஆம் திகதி மாலை 6 மணியளவில் மார்க்கம் பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து முகமூடி அணிந்த மூவரால் மாணவர் Wanzhen Lu கடத்தப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கண்காணிப்பு கமெராவில் பதிந்திருந்த காட்சிகளின் அடிப்படையில், அந்த முகமூடி நபர்கள் மூவரில் ஒருவர் அதான் என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே மார்ச் 26 ஆம் திகதி மாணவர் Wanzhen Lu கடத்தப்பட்டட பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் குறித்த மாணவர் உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்