தன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்... கணவரின் மகன் குறித்து வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தன்னை விட 45 வயது அதிகமானவரை திருமணம் செய்து கொண்டு இளம்பெண் வாழ்ந்து வரும் நிலையில் சமூகத்தில் தான் சந்திக்கும் சவால்கள் பற்றி கூறியுள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் ஆர்ம்ஸ்டார்ங் நகரை சேர்ந்தவர் டான் வால்பர் (69). இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மதுபான விடுதியில் பணிபுரிந்த ஸ்டிபனி (24) என்ற இளம்பெண்ணை பார்த்த நிலையில் இருவரும் நட்பாகியுள்ளனர்.

அதன்பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்தனர், அப்போது முதல் மனைவி மூலம் தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறியுள்ளார்.

மகன் குறித்த தகவலை கேட்டதும் ஸ்டிபனி ஆச்சரியமான பல விடயங்களை டானிடம் கூறினார்.

காரணம் டான் மகனும், தானும் சிறுவயதிலிருந்தே ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து வந்தோம் எனவும், நண்பர்கள் எனவும் ஸ்டிபனி கூறினார்.

அதே நேரத்தில் தன்னை விட 45 வயது அதிகமான டான் மீது ஸ்டிபனிக்கு காதல் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது ஒன்றரை வயதில் லச்லன் என்ற மகன் இந்த தம்பதிக்கு உள்ளான்.

இது குறித்து ஸ்டிபனி கூறுகையில், நானும் என் கணவர் டானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.

என் சகோதரருக்கு எங்கள் திருமணத்தில் சுத்தமாக விருப்பமில்லை, அதையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

என்னையும், டானையும் சேர்ந்து பார்க்கும் பலர் தந்தை, மகள் என நினைத்து விடுகிறார்கள்.

ஆனால் இதனால் நான் கோபமடைவதோ அல்லது வேதனையடைவதோ கிடையாது, நானும் அவரும் கணவன், மனைவி என்பதை அவர்களுக்கு புரிய வைப்பேன்.

இப்படி, எங்கள் வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers