லாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லாட்டரில் $2 மில்லியன் பரிசு விழுந்தும், கோடீஸ்வரராக மாறியுள்ள சீட்டை வாங்கிய மர்ம நபர் இன்னும் பரிசை வந்து வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.

வின்னிபெக் நகரை சேர்ந்த யாரோ தான் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் விடுத்துள்ள அறிவிப்பில், வின்னிபெக் நகரில் தான் $2 மில்லியன் பரிசு விழுந்த லாட்டரி சீட்டு வாங்கப்பட்டது.

இந்த சீட்டுக்கான குலுக்கல் கடந்த 4-ஆம் திகதியே நடந்தும் இதற்கான பரிசை இன்னும் யாரும் வாங்கவில்லை.

ஆனால் பரிசை பெறுவதற்கு ஒரு வருட கால அவகாசம் உள்ளது.

குறித்த லாட்டரி சீட்டின் வெற்றி எண்களை வைத்துள்ளவர்கள் 1-800-665-3313 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்