கனடாவின் கிராமப்புற பகுதியில் சடலமாக கிடந்த இரண்டு பேர்.. புகைப்படங்களுடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சடலமாக கிடந்த இரண்டு ஆண்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர்களின் பெயர் விபரங்களும் தெரியவந்துள்ளது.

பிரிட்டீஸ் கொலம்பியாவின் Ashcroft என்ற கிராம பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து மாயமான ரயன் ப்ரோவென்சர் (38) மற்றும் ரிச்சர்ட் ஸ்குர் (37) ஆகியோர் தான் சடலமாக கிடந்த நபர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இருவரும் கடந்த மாதம் 17ஆம் திகதி வெள்ளை நிற ஜீப்பில் ஏறி சென்ற நிலையில் அதே மாதம் 20ஆம் திகதி மாயமானதாக புகார் கொடுக்கப்பட்டது.

குற்ற செயல்களில் ஈடுபடும் போதே இருவரும் இறந்துள்ளதாக பொலிசார் கருதுகிறார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers