கனடாவில் குடிபெயர்ந்த விவாதத்துக்குரிய பெண்மணி: அம்பலமான அவரின் அடுத்த திட்டம்

Report Print Arbin Arbin in கனடா

மத அடிப்படைவதிகளால் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட பாகிஸ்தானிய பெண்மணி, தற்போது கனடாவில் இருந்து வேறு ஐரோப்பிய நாட்டுக்கு குடிபெயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானிய கிறிஸ்தவரான ஆசியா பிபி, இஸ்லாம் மதத்தையும் அதன் மத போதகர்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, அங்குள்ள மத அடிப்படைவாதிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், 54 வயதான ஆசியா பிபிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அடைக்கலம் வழங்க கனடா ஒப்புக்கொண்டது.

தற்போது தற்காலிக அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ஆசியா பிபி குடும்பம், கனடாவில் இருந்து வேறு ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழலில் தமக்கு உதவிக்கரம் நீட்டிய சர்வதேச சமூகத்திற்கு தாம் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என கண்கலங்கியுள்ள ஆசியா பிபி,

தற்போதைய சூழலில் கனடாவில் தாம் தங்கியிருப்பது தமது அல்லது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்துள்ள அவர்,

இங்கிருந்து இதே ரகசிய நிலையில், வேறு ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நீண்ட 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆசியா பிபி, பின்னர் கனேடிய அரசாங்கத்தின் தீவிர முயற்சியின் ஊடாகவே விடுவிக்கப்பட்டு,

தற்போது கனடாவில் உள்ள பெயர் வெளியிடப்படாத பகுதியில் அரசு பாதுகாப்புடன் குடியிருந்து வருகிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஆசியா பிபி பிரித்தானியாவுக்கும் குடியேற மறுத்து வருகிறார். ஆனால் பிரான்ஸ் அல்லது பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளில் ஒன்றில் குடியேற அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்