இலங்கை தமிழ்ப்பெண்ணின் உடல் தாய்நாட்டில் புதைக்கப்படுவதற்காக பணம் சேகரிப்பு!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் முன்னாள் கணவனால் வெட்டிக் கொல்லப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணொருவரின் உடலை தாய் நாட்டில் அடக்கம் செய்வதற்காக அவரது நண்பர்கள் பணம் சேகரித்து வருகிறார்கள்.

தர்ஷிகா ஜென்னாதன் (27), பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது அவரது முன்னாள் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் (38) என்பவரால் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்ட தனபாலசிங்கம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.

2015ஆம் ஆண்டு சசிகரனை திருமணம் செய்த தர்ஷிகா, 2017ஆம் ஆண்டுதான் கனடாவுக்கு வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து தர்ஷிகாவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சசிகரன், அவரை தொடர்புகொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தர்ஷிகாவுக்கு கனடாவில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தாமாகவே சொந்தக்காலில் நின்று வாழ தீர்மானித்திருக்கிறார் அவர்.

அதேபோல், தானும் வாழ்ந்து, இலங்கையிலிருக்கும் தனது குடும்பத்துக்கும் உதவுவதற்காக ஒரு வேலையைத் தேடிக்கொண்டதோடு, வாழ ஒரு இடத்தையும் தேடிக்கொண்டார் தர்ஷிகா.

ஆனால் தைரியமாக பெண்ணான தர்ஷிகாவின் முயற்சிகள் அவரது கணவருடனான பிரச்னைகளால் வெற்றிபெறாமலே போய்விட்டன.

தற்போது, தர்ஷிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு சென்று, அவரது தாய்நாட்டிலேயே அடக்கம் செய்வதற்காக அவரது நண்பர்கள் பணம் சேகரித்து வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்