நான்கு பேரை கொலை செய்தது ஏன்: சிக்கிய இளம்ஜோடி பரபரப்பு தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கு ஒன்றில், தங்கள் நோக்கம் ஒருவரைக் கொல்வதுதான் என்றும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் மூவரை கொலை செய்ததாகவும் இளம்ஜோடி ஒன்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளது.

2017ஆம் ஆண்டு யூலை மாதம் 9ஆம் திகதி, Yu Chieh Liao(27) என்ற இளம்பெண் Hanock Afowerk (26) என்ற இளைஞரை சந்தித்திருக்கிறார்.

மறுநாள் Cody Pfeiffer (25), Tiffany Ear (39) மற்றும் Glynnis Fox (36) என்னும் சகோதரிகள் இருவர், என மொத்தம் மூன்று பேரின் உடல்கள் எரிந்த நிலையிலிருந்த கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், Calgaryக்கு மேற்கே சாலையோரமாக Afowerk பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Postmedia Calgary

அவரது உடலில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் கிடைத்தன.

பொலிஸ் விசாரணையில், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவங்களைத் தொடர்ந்து Liaoவும் Tewodros Mutugeta Kebede (27) என்ற இளைஞரும் ரொரன்றோவில் பொலிசாரிடம் சிக்கினார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது Liaoவுக்கு போலி அடையாளங்களை விற்க முடிவு செய்திருக்கிறார் Afowerk. அவரைப் பிடித்துவைத்துக்கொண்டு, சித்திரவதை செய்து, பணம் முதலான தேவையான விடயங்களை பெற்றுக்கொண்டபின், அவரை சுட்டுக்கொன்று உடலை சாலையோரம் வீசியிருக்கிறார்கள்.

Facebook/Megan Snell/Calgary Police Service

இந்த குற்றச்செயல்களின்போது Pfeiffer என்பவரும் உடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, Afowerkஐ கொலை செய்த Liaoவும் Kebedeயும், தங்களுடன் இருந்த Pfeiffer, Fox மற்றும் Tiffany ஆகிய மூவரும் தங்களைக் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக, நடந்த சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்த அவர்களை கொலை செய்துள்ளார்கள் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Calgary Police Service

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்