கனடாவில் பனிக்காலம்! வீடற்றவர்களுக்கு உதவும் தன்னார்வலர்கள்

Report Print Fathima Fathima in கனடா

கனடாவில் பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வீடற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் முன்வந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

மொன்றியலின் Place Émilie-Gamelin என்ற பகுதியில் திரண்ட 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்தனர்.

இதன் போது குளிருக்கு இதமான உடைகள், உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன, இவர்கள் அனைவரையும் எங்கள் குடும்பமாக பார்க்கிறோம், உதவி என்பதையும் தாண்டி நம் அன்பு தான் அவர்களுக்கு தேவை என்கிறார் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த Gigi Gougeon.

கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதம் மூன்றாம் சனிக்கிழமைகளில் இங்கு வரும் Gigi Gougeon, வீடில்லாமல் இருந்தாலும் பலரும் தனக்கென ஒரு பணியை தேடி வேலை செய்து சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும் போது உழைப்பின் பலனை கண்டு தான் நெகிழ்வதாகவும், பலருக்கும் போதை மற்றும் ஆல்கஹாலை எடுத்துக்கொள்ளக்கூடாது என அறிவுரை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கியூபெக்கில் மட்டும் சுமார் 6000 பேர் வீடில்லாமல் தெருவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்