மாணவர்கள் மீது மனிதக்கழிவுகளைக் கொட்டிய நபரை தேடும் பொலிசார்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இரண்டு நூலகங்களில் மாணவர்கள் மீது மனிதக்கழிவுகளை வீசிய நபரை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை யார்க் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் மீது மனிதக் கழிவுகள் அடங்கிய பக்கெட்டை கவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் ஒரு கருப்பினத்தவர்.

அடுத்து, வெள்ளியன்று ரொரன்றோ பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவர் மீதும் மனிதக்கழிவுகள் கொட்டப்படன.

தனது 20 வயதுடைய ஒரு கருப்பினத்தவர் இந்த செயலை செய்ததை கண்ணால் பார்த்ததாக யார்க் பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ரொரன்றோ பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு கருப்பினத்தவர் சீன மாணவர் ஒருவர் மீது மனிதக்கழிவுகளைக் கொட்டி விட்டு சிரித்துக்கொண்டே வெளியேறியதாக அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என விசாரித்து வரும் ரொரன்றோ பொலிசார், சந்தேகத்துக்குரிய கருப்பின இளைஞர் ஒருவரின் படத்தை வெளியிட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்