கனடாவில் பிரபல மூத்த நடிகர் மரணம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பிரபல நடிகரும், எழுத்தாளருமான வால்டர் லேர்னிங் 81வது வயதில் காலமானார்.

கனடாவின் Newfoundland மாகாணத்தில் கடந்த 1938ஆம் ஆண்டு வால்டர் லேர்னிங் பிறந்தார். இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கினார்.

இந்நிலையில் வால்டர் கனடாவின் Fredericton நகரில் உயிரிழந்து விட்டதாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இவர் Theatre New Brunswick என்ற திரையரங்க நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

வால்டரின் மறைவுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Fredericton மேயர் மைக் ஓ பிரைன் தனது இரங்கல் செய்தியில், வால்டர் கலைக்காக மிகப்பெரிய பங்களிப்பை தனது வாழ்நாளில் கொடுத்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்