கொரோனாவை தடுக்கும் தேநீர்... ரகசிய கமெராவில் சிக்கிய அக்குபஞ்சர் நிபுணர்

Report Print Balamanuvelan in கனடா

எங்கள் தேயிலைதான் வுஹான் மருத்துவர்களை கொரோனா தொற்றுவதிலிருந்து காப்பாற்றியது என்று கூறும் கனேடிய அக்குபஞ்சர் நிபுணர் ஒருவரை ரகசிய கமெராவுடன் சிக்கவைத்துள்ளனர் ஊடகவியலாளர்கள்.

சென்ற வாரம் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பவரான Guojian Huang என்பவரிடமிருந்து கனடாவில் பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

அவற்றில், ஆறு மூலிகைகள் கலந்த தேநீர் ஒன்றை ஆறு நாளைக்கு அருந்துவதால் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

நம் நாட்டில் கொரோனா இருக்கிறது, கூடவே அதை தடுக்க எங்கள் மூலிகை தேநீரும் இருக்கிறது என்று கூறின அந்த மின்னஞ்சல்கள்.

கொரோனாவை தடுக்கும் தேநீரை உடனே ஆர்டர் செய்யுங்கள் என தன் அக்குபஞ்சர் வாடிக்கையாளர்களை அழைத்தது அந்த விளம்பரம்.

ஊடகவியலாளர் ஒருவர், மறைத்து வைக்கப்பட்ட ரகசிய கமெரா ஒன்றுடன், வாடிக்கையாளர் போல அக்குபஞ்சர் சிகிச்சையளிக்கும் Huangஐ சந்தித்துள்ளார்.

அவரிடம் பேசிய Huang, தனது தனது தேநீரை போன்ற ஒரு தேநீரைக் குடித்துவிட்டு வுஹானுக்கு சென்ற சுமார் 200 மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு, பத்திரமாக திரும்பியதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Ankang Acupuncture Healing Centre Inc

ஆனால், அங்கீகாரமற்ற இத்தகைய பொருட்களை விற்பதும், கொரோனாவை தடுப்பது, சிகிச்சையளிப்பது மற்றும் குணமாக்குவதாக தவறான நம்பிக்கையளிப்பதும் கனடாவில் சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள கனடா சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் இத்தகைய விடயங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்களும் இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என கனேடியர்களை எச்சரித்துள்ளனர்.

acupuncturewinnipeg.ca

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...