கொரோனாவுக்கெதிராக போராடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ள கனேடிய அரசு!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனாவுக்கெதிராக முன்னணியில் நின்று போராடியவர்களான அத்தியாவசியப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா கொள்ளைநோய் நாட்டையே உலுக்கி வந்த நிலையிலும், அதற்கெதிராக முன்னணியில் நின்று போராடியவர்களான அத்தியாவசியப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இம்மாதம் 7ஆம் திகதி (மே 7) வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கும்போது பேசிய பிரதமர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒருவர் கனடா முன்னோக்கிச் செல்வதற்கு உதவினாரென்றால், நிச்சயம் அவருக்கு ஊதிய உயர்வளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, கனேடிய அரசு, அத்தியாவசியப் பணியாளர்களின் ஊதிய உயர்வுக்காக மட்டும் 2.1 பில்லியன் டொலர்கள் செலவிட உள்ளதாக அரசின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உண்மையில், இந்த தொகை மொத்த ஊதிய உயர்வில் 75 சதவிகிதம்தானாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்