இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடியர்களுக்கு அமெரிக்கா அளித்துள்ள மில்லியன் டொலர் இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்க கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு, அவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும் பல மில்லியன் டொலர்கள் அளவிலான ஒரு பெரும் உதவித்தொகை தேடி வருகிறது.

அமெரிக்க கொரோனா உதவித்தொகை ஒன்று அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இரட்டைக் குடியுரிமையுடையவர்களாக இருந்து கனடாவில் வசித்தாலும், அவர்களையும் தேடி இந்த உதவித்தொகை வர இருக்கிறது.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு அமெரிக்க குடியுரிமை கொண்ட கனேடியர்களும், கனடாவில் வாழும் அல்லது பணிபுரியும் அமெரிக்கக் குடிமக்களும் 2018 - 2019 ஆண்டுக்கான வரி செலுத்தியது தொடர்பான ஆவணம் ஒன்றை அளிக்கவேண்டும்.

கனடாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பலரும் இந்த எதிர்பாராத உதவியால் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள் என்கிறார் Democrats Abroad என்ற அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Ed Ungar.

40 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்துவந்த நிலையில், அவர்கள் இதுவரை அமெரிக்காவிடமிருந்து ஒரு சென்ட் கூட உதவி பெற்றதில்லை என்பதுதான் அதன் காரணம் என்கிறார் அவர்.

அனால், திடீரென தங்களுக்கு அமெரிக்கா 1,600 டொலர்கள் வழங்குவது அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது என்கிறார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்