கொரோனாவுடன் போராடும் கனேடிய தொண்டு நிறுவனங்களுக்காக உலகை சுற்றி ஓடிய பிரித்தானிய தூதரக ஊழியர்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனாவுடன் போராடும் கனேடிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, பிரித்தானிய தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நெகிழ்ச்சி செயல் ஒன்றை செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கொரோனாவுடன் போராடும் கனேடிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, பிரித்தானிய தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் உலகம் முழுவதையும் சுற்றிவந்துள்ளனர்.

24 மணி நேரத்தில் உலகம் முழுவதையும் சுற்றி வருவது அவர்கள் இலக்கு. இதை எப்படி செய்வது?

கனடாவின் கால்கரியில் தனது ஓட்டத்தை துவக்கினார் கனடாவுக்கான பிரித்தானிய தூதரக அலுவலரான Caroline Saunders. அவருடன் சகப் பணியாளர்கள் ஐவர் கலந்துகொண்டார்கள்.

ஒருவர் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும், அடுத்தவருக்கு தொலைபேசியில் அழைத்து, தான் தனது ஓட்டத்தை முடித்துவிட்டதை தெரிவிப்பார்.

உடனே, தயாராக இருக்கும் அடுத்தவர் தனது ஓட்டத்தை தொடருவர். இப்படியே 3,000 பிரித்தானிய அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அந்த ஓட்டத்தை தொடர்ந்தனர்.

ஒரு நாட்டில் ஓட்டம் முடிந்ததும், அடுத்த நாட்டில் இருப்பவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் தங்கள் பங்குக்கு தங்கள் ஓட்டத்தை தொடருவார்கள்.

இப்படியே, Samoaவிலிருந்து Vancouver அவரை 101 நாடுகளில் ஓட்டம் தொடர்ந்துள்ளது.

சிலர் ஓடியிருக்கிறார்கள், சிலர் நடந்திருக்கிறார்கள், சிலர் வீட்டு கூரைகளின் மேல் ஓடியிருக்கிறார்கள், தனிமைப்படுத்துதல் இல்லாத நாடுகளில் சாலைகளில் ஓடியிருக்கிறார்கள். சிலர் நீந்தியுமிருக்கிறார்கள்.

கனடாவில் ஓடியவர்களின் நோக்கம் எப்படியாவது தொண்டு நிறுவனங்களுக்காக 2,000 டொலர்களாவது சேகரித்து விடுவதாகும்.

சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம், ஆகவே கொஞ்சம் funம் தேவைப்பட்டது என்கிறார் வெற்றிகரமாக இலக்கை முடித்த Saunders.

Supplied photo

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்