இந்த நாட்டில் அடுத்த வாரம் முதல் தியேட்டர்கள் திறப்பு!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் அடுத்த வாரம் முதல் தியேட்டர்களைத் திறக்க கனேடிய பொருட்காட்சி ஜாம்பவானான நிறுவனம் ஒன்று திட்டமிட்டு வருகிறது.

கொரோனாவால் நாடு குழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், கனடாவின் மிகப்பெரும் பொருட்காட்சி நிறுவனமான Cineplex, ஆல்பர்ட்டாவில் இம்மாதம் (ஜூன்) 26ஆம் திகதி, ஆறு தியேட்டர்களைத் திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 3ஆம் திகதி, பல்வேறு இடங்களில் எத்தனை தியேட்டர்களைத் திறக்க முடியுமோ, அத்தனை தியேட்டர்களையும் திறக்கவும் அது திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Cineplex வசம், 165 தியேட்டர்கள் மற்றும் 1,695 திரைகள் உள்ளன.

கனடாவின் 75 சதவிகித பாக்ஸ் ஆபீஸ் ஷேர்களை அது தன் வசம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்