கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழர்! புகைப்படங்களுடன் வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 52 வயதான இலங்கை தமிழர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் புகைப்படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில் Nadarajah Mahendrarajah என்ற 52 வயதான நபர் கடந்த 21ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ஆம் திகதி காலை 10 மணிக்கு Islington Ave & Elmhurst Dr பகுதியில் Nadarajah கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒல்லியான உருவம் கொண்டவர் ஆவார்.

காணாமல் போன அன்று நீல நிற ஷார்ட்ஸ் மற்றும் நீண்ட ஸ்லீவ் டி-ஷர்ட் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nadarajah குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்