கொன்று விடுவார்கள்... கெஞ்சிய வடகொரிய முன்னாள் அதிகாரி: கைவிட்ட கனேடிய நிர்வாகம்

Report Print Arbin Arbin in கனடா

வடகொரியாவின் முன்னாள் தலைவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட நபருக்கும் குடும்பத்திற்கும் புகலிடம் வழங்க கனடா மறுத்துள்ளது.

தென் கொரியாவுக்கு தம்மை திருப்பி அனுப்பினால், வடகொரிய உளவாளிகளால் தாம் கடத்தப்பட்டு, கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல் என்பவருக்கு பாதுக்காக்கு அதிகாரியாக செயல்பட்டவர் தற்போது 57 வயதாகும் லீ யங்-குக்.

மாதம் 100 அமெரிக்க டொலர் ஊதியத்தில் பணியாற்றிய லீ, கிம் ஜாங் இல் எங்கு சென்றாலும் அவருடன் பயணித்து அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்துள்ளார்.

1978 முதல் பாதுகாப்பு பணியில் செயல்பட்டு வந்த லீ, ஒருகட்டத்தில் நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்து,

கடந்த 2000-ல் சீனா வழியாக தென் கொரியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஆனால் தென் கொரியாவில் இருந்த காலகட்டத்தில் இரண்டு முறை வடகொரிய உளவாளிகளால் தாம் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், கடத்தல் முயற்சி நடந்ததாகவும் பத்திரிகை ஒன்றில் லீ வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016-ல் கனடாவுக்கு குடிபெயர்ந்த லீ குடும்பம், புகலிடம் கோரியுள்ளது.

வடகொரியாவுக்கு எதிரான தமது விமர்சனங்கள், தற்போது தமது குடும்பத்தின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக லீ தெரிவித்துள்ளார்.

ஆனால் லீ முன்வைத்துள்ள விடயங்களில் நம்பகத்தன்மை இல்லை எனவும், வடகொரிய தலைவர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தாம் விலகி இருந்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை எனவும் கனேடிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், லீ குறிப்பிட்டுள்ள தகவல்களை கனேடிய நிர்வாகத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், லீயின் புகலிடக்கொரிக்கையை நிராகரித்ததன் காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

கனேடிய நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்புவதாக லீ தெரிவித்துள்ளார்.

ஒரு சர்வாதிகார அமைப்பில், அரசாங்கம் செய்யச் சொல்வதை நீங்கள் பின்பற்றாவிட்டால், உங்கள் முழு குடும்பமும் நீங்களும் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவீர்கள்,

இதுதான் வடகொரியாவில் இதுவரை நடப்பவை என்கிறார் லீ.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்