இரவு முழுதும் உயிரோடு இருந்தாலே போதும் என இருந்தோம்! ஆபத்தான இடத்தில் சிக்கி கொண்ட இளம்தம்பதியின் திகில் நிமிடங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சுற்றுலா சென்ற இளம்தம்பதி குளிர் நிறைந்த மலைப்பகுதியில் இரவு முழுவதும் சிக்கி கொண்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ரொரன்ரோவை சேர்ந்த சுற்றுலா பயணிகளான Anthony Lam (26) மற்றும் அவர் மனைவி Roya Rasoulian (23) ஆகியோர் வான்கூவருக்கு வந்துள்ளனர்.

பின்னர் North Shore மலைப்பகுதிக்கு இருவரும் சனிக்கிழமை சென்ற போது அவர்களால் திரும்பி வர முடியவில்லை.

இதை தொடர்ந்து இரவு முழுவதும் குளிர்ந்த மற்றும் ஈரமான பகுதியில் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்கியுள்ளனர்.

இருவரையும் North Shore மீட்புக்குழுவினர் தேடி வந்த நிலையில் ஞாயிறு அன்று பத்திரமாக மீட்டனர்.

தங்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கு தம்பதி உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.

Anthony கூறுகையில், ஜாலியாக பல இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனால் தவறுதலாக மாற்றுப்பாதையில் சென்றுவிட்டோம்.

எனக்கு அதிக தூரம் நடந்து செல்வதில் எப்போதும் ஆர்வம் இருந்தது, ஆனால் சூரியன் மறையும் நேரம் வந்ததோடு மழையும் பெய்ததால் அந்த சூழலை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என கூறியுள்ளார்.

Roya கூறுகையில், இரவு முழுவதும் உயிரோடு எங்களை வைத்திருந்தாலே போதும் என்ற நிலையில் இருந்தோம்.

பாறைகள் பார்க்கவே மிகவும் பயமாக இருந்தது, நாங்கள் கீழே விழப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்.

மீட்புக்குழுவினரை பார்த்த போது அவர்கள் வானத்திலிருந்து வந்த தேவதூதர்கள் போல எங்களுக்கு தெரிந்தார்கள்.

இந்த சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்