கனடாவில் பயங்கரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கத்தி குத்து: இரத்த வெள்ளத்தில் கிடந்த துயரம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் சர்ரே பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கத்திக்குத்து விழுந்ததாக கிடைத்த தகவலின்பேரில் அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்தனர்.

அங்கே பல்ஜீத் கவுர் என்ற பெண், ஜக்ஜீத் சிங் என்ற ஆண் மற்றும் இரண்டு வயது குழந்தை ஒன்று ஆகிய மூவர் இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட பொலிசார் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில், பல்ஜீத் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மற்ற இருவருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஹர்பிரீத் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது ஒரு குடும்பத் தகராறு என்று கூறியுள்ள பொலிசார், பாதிக்கப்பட்டவர்களும், கைது செய்யப்பட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களே என்று தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களுக்குள் வாக்குவாதமாக தொடங்கிய சண்டை ஒரு உயிரிழப்பில் முடிந்துள்ளது என்று கூறிய Sgt. Frank Jang என்னும் பொலிசார், இதுபோல் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்தார்.

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்