கனடாவில் தொடர்ச்சியாக 5வது ஆண்டு குற்றங்கள் அதிகரிப்பு: நாட்டின் நிலை குறித்து புள்ளிவிவர நிறுவனம் முக்கிய தகவல்

Report Print Basu in கனடா
60Shares

கனடாவில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 2019-வது ஆண்டும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் பொலிஸ் புகாரளித்த குற்றங்கள், குற்றத்தின் தீவிரத்தன்மை அட்டவணை (சி.எஸ்.ஐ) கீழ் அளவிடப்பட்டுள்ளது.

அதன் படி, 2019 ஆம் ஆண்டில் கனடாவில் குற்றங்கள் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-ல் 75.6 சதவீதம் அளவிடப்பட்ட நிலையில் 2019-ல் 79.5 ஆக உயர்ந்துள்ளது.

கனடாவில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சி.எஸ்.ஐ அதிகரித்துள்ளது என கனடா புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் வன்முறையற்ற குற்றங்கள் இரண்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்ந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, கனேடிய சட்ட அமலாக்கத்துறையின் படி, கனடாவின் குற்றவியல் விதியின் கீழ் 2.2 மில்லியனுக்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகியுள்ளது, இது 2018 உடன் ஒப்பிடும்போது 1,64,748 அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் உயர்ந்துள்ளதே இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. கூடுதலாக, கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 2 சதவீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் சி.எஸ்.ஐ 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட 9 சதவீதம் குறைவாக இருந்தது என்று புள்ளிவிவர நிறுவனம் குறிப்பிட்டது.

கனடாவின் பத்து மாகாணங்களில், கியூபெக்கில் மட்டுமே குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்