கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in கனடா
159Shares

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு 8 மணி வரை மட்டுமே மது விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாலையே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் புத்தாண்டுக்கு முந்தைய நாள் பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் அரசு முன்னெடுத்து நடத்தும் கடைகளும் தனியார் கடைகளும் இரவு 8 மணி வரையே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர நடவடிக்கை கடைகளுக்கு மட்டுமின்றி மதுபான விடுதிகள் மற்றும் மதுபானம் விற்பனை செய்யப்படும் உணவகங்களுக்கும், மதுபானம் விற்கும் மளிகைக் கடைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உணவகங்கள் இரவு 10 மணி வரையில் தொடர்ந்து செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிராந்தியம் முழுவதும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் இருத்தல் வேண்டும் என கோரியுள்ள நிர்வாகம், அதிக கவனம் தேவைப்படும் பகுதிகளில் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ள இந்த அவசர நடவடிக்கையானது எஞ்சிய பிராந்தியங்களும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்