கனடாவில் உரிமம் பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தி வந்த நபரிடம் மசாஜ் செய்ய சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் அனுமதி இல்லாமல் மசாஜ் சென்டர் வைத்திருந்த நபர் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டார்.

வான்கூவரை சேர்ந்தவர் சுன் ஜின் தங் (55). இவர் உரிமம் பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தி வந்திருக்கிறார்.

அவரிடம் மசாஜ் செய்து கொள்ள இளம்பெண்ணொருவர் இரு தினங்களுக்கு முன்னர் வந்தார். அவரை டேபிள் மீது படுக்க வைத்த ஜின் தங் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக பொலிசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார்.

இந்த சம்பவத்தில் நல்லவேளையாக அப்பெண்ணுக்கு உடலில் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

புகாரையடுத்து பொலிசார் ஜின் தங்-கை கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவருக்கு பெண்களுக்கு மசாஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜின் தங் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்