கனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ராஜதுரை கஜேந்திரன் என்ற 56 வயது நபர் கடந்த 14ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காணாமல் போனார்.
அவர் கடைசியாக Kennedy Rd & Eglinton Ave E பகுதியில் காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
ராஜதுரையின் உயரம் 5 அடி 9 அங்குலம் என பொலிசார் தெரிவித்ததோடு, அவர் குறித்த சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டார்கள்.
இந்தநிலையில் ராஜதுரை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உதவியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.