வட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு

Report Print Kumar in சமூகம்
96Shares
96Shares
lankasrimarket.com

வட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு யாழ். பொதுநூலக மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்து நடத்திய குறித்த செயலமர்வு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முப்பது வருடகாலமாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று பல்வகையான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக நிரந்தரமான ஒரு திட்டமிடலை தயாரித்து அதை வட மாகாண அமைச்சின் ஊடாக செயற்படுத்துவதற்கும் ஏனையவர்களின் ஒத்துழைப்பை பெற்று அதை நடைமுறைப்படுத்தும் நோக்கிலும் இந்த பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிகழ்வின்போது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் ஹேர்மன் குமார, வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுனத்துவம் வாய்ந்தவர்கள், பெண்கள் அமைப்பின் தலைவிகள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்