ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கால்கோள் விழா

Report Print Thirumal Thirumal in சமூகம்

2019 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக இன்று நாடளாவிய ரீதியில் கால்கோள் விழா நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியிலும் தரம் 1இற்கான மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதில் ஹட்டன் கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவிற்கான உதவி கல்வி பணிப்பாளர், அதிபர் மற்றும் பிரதி அதிபர், சீடா வள நிலையத்தின் இணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தரம் ஒன்றிற்கு இணைந்து கொள்ள வந்த மாணவர்களை, தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றுள்ளனர்.

அத்துடன் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்