ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைய காத்திருக்கும் முள்ளிவாய்க்கால் மண்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தமிழின அழிப்பின் 10ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளது.

இதற்காக முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதி ஆயத்த நிலையில் உள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உயிர்நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு வந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றழிக்கப்பட்டதை, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்று நினைவு கூருகின்றனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், இன்று காலை 10.30 மணியளவில், நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நினைவுச்சுடர் ஏற்றி, அமைதியான முறையில் வணக்கம் செலுத்தும் இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்று அஞ்சலி செலுத்துமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் பகுதியில் சிவப்பு, மஞ்சள் வண்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள வளாகத்தை சூழ நூற்றக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள சந்தர்ப்பத்தில் நிகழ்வுக்காக மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்