முதுமை அடைதலை நிறுத்த முடியுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

Report Print Givitharan Givitharan in சமூகம்

மனிதனில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் தீர்வைத் தரக்கூடிய மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகளை அறிமுகம் செய்த விஞ்ஞானிகள் அவர்களின் முதுமை அடைதலை தவிர்க்கவும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் இறுதியில் இது சாத்தியம் இல்லை என்பதை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர், இதனை கணித ரீதியாக உறுதிப்படுத்தியும் உள்ளனர்.

அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கணித ரீதியாக மட்டுமன்றி தர்க்க ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் இது சாத்தியம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்